Thursday, May 1, 2014

அஜ்ஞாத ஸுக்ருதம் :

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீவசனபூஷணம் -  சதுர்த்தப்ரகரணம் (6ல் ஆறு) - சூ - 384 :

நிர்ஹேதுக கிருபா பிரகரணம் :

த்ரிபாத் விபூதியிலே பரிபூர்ணானுபவம் நடவா நிற்க............
தனக்கேற இடம் பெற்றவளவிலே .....ஜன்ம பரம்பரைகள் தோறும் ''யாத்ருச்சிகம், ப்ராஸங்கிகம், அனுஷங்கிகம்'' என்கிற ஸுக்ருத விசேஷங்களைக் கற்பித்துக் கொண்டு தானே அவற்றை ஒன்றுபத்தாக்கி நடத்திக் கொன்டு போரும்.

அஜ்ஞாத ஸுக்ருதமாவது சேதனன் அறியாததாய், பகவான் ஒருவனே அறிந்ததாய் இருப்பதொன்று.

என் ஊரைச் சொன்னாய், என்பேரைச் சொன்னாய் இத்யாதி - 

கொல்லி மலை, விராலி மலை, ''அழகர் மலை'' என தன் மூன்று பெண்ணை மணம் முடித்த இடங்களின் பெயரைச் சொல்லிவர, ''மாலிருஞ் சோலை மலை'' பற்றி பிரஸங்காது மொழியவும், 

அவர், இவர் என்று பல சொல்லும் போது ஒருவன் பேரைச் சொல்லுகிறதாக பகவன் நாமங்களில் ஒன்றை சொல்லுகையும் ,

பிராஸங்கிகம் (பிரஸங்காது சொல்லப்படுமவை) :

என் அடியார்கள்  விடாய் தீர்த்தாய், அவர்கள் ஒதுங்க நிழல் கொடுத்தாய் இத்யாதி -

செய்புல பயிர் வாட்டத்தை தவிர்க்க நீர் இறைப்பான் வயல் வழி சில பாகவதர்கள் செல்ல, அந்த குடியானவன் அறியாமல் வந்த பாகவதர்கள் ஸ்ரீபாதம் முதலியவற்றை விளக்கி இளைப்பாறி போமிடத்தும், 

சூது, சதுரங்கத்துக்காக காற்றை அபேக்ஷித்து  கட்டி வைத்தான் கிருகத்தின் புறம் திண்ணை வழி சில பாகவதர்கள் வர்ஷாகாலத்தில் அங்கே ஒதுங்கி இருந்தாராகிலும்,

யாத்ருச்சிகம் (அறியாது விளையுமவை) :

என் அடியாரை நோக்கினாய் - 

சில பாகவதர்கள் காட்டு வழியே போக, வழிபறி கொள்ளையர்கள் கையில் உள்ளதை அபஹரிக்க முற்படும் போது, ஸ்வ காரியமாக ராஜ சேவகன் ஒருவன் அதேவழி செல்ல, இவர்கள் ரக்ஷ ணத்துக்குத்தான் அவனும் வருவதாக நினைத்து அபஹரியாது ஓடிவிடுகை 

அனுஷங்கிகம் (தன்னடையே சித்திப்பவை) :

போன்ற சிலவற்றை ஏறிட்டு மடிமாங்காயிட்டு , பொன் வாணியன் பொன்னை உரைகல்லிலே உரைத்து மெழுகாலே எடுத்துக் கால்கழஞ்சு  என்று திரட்டுமா போலே ஸுக்ருத விசேஷங்களை ஒன்று பத்தாக்கி நடத்திக் கொண்டு போரும் 

''எல்லீரும் வீடு பெற்றால் உலகில்லையே'' என்கிற ஸர்வ முக்திப் பிரசங்கம் வாராமைக்காக, ஒன்றை பச்சையாக்கி அங்க்கீகரிக்குமதே அன்றி, ஈஸ்வர கிருபை ஸஹேதுக மன்று. அதவா, அஜ்ஞாத ஸுக்ருதம் வியாஜம் மட்டுமே. ஹேதுவன்று.

இப்படியான நிர்ஹேதுக விஷயீகார வைபவம் அறியாதவர்கள் அஜ்ஞர்கள்.  அதாவது, சேதன உஜீவனார்த்தமான ஸ்ருஷ்டி அவதார முகத்தாலே ஈஸ்வரன் பண்ணின கிருஷி பரம்பரைகளின் பெருமை அறியாதவர்கள் இவர்கள்.

யதனந்தரம் யத்யுத்பவதி தது தஸ்ய காரணம் - அதன்படி இச்சேதனன் அறியாமல் விளையுமவை சிலவற்றை பற்றாசாக அங்கீகரிக்கும் என நினைப்பவர்கள் சாமான்யர்கள்.

''வாளா (வெறுமனே) தந்தார்'' -  வாள் வலியாகிற ஸ்வ சக்தியாலே தந்தார் என்றிருப்பவர்கள் அஸ்மதாதிகள்.

மேலே சொன்ன  அஜ்ஞாத ஸுக்ருதமும் பகவத் சங்கல்பாதிசயத்தால் விளையுமவை அன்றோ? பிற்பாடதான ''பகவத் ஆபிமுக்யம்'' பகவத் கிருபையாலே என்னில், தத் பூர்வ பாவியான ருசி, அத்வேஷங்கள் ஸுக்ருதத்தாலே யானாலும். பலத்தைப் பார்க்க சாதனமாக்க ஒண்ணாது. ராஜ்யத்துக்கு எலுமிச்சம் பழமும், ரத்னத்துக்கு பலஹரையும் போலே பல விசதுர்ஸ்யம். 

''நாசௌ புருஷகாரேண நசாப்யன்யேந  ஹேதுநா |
கேவலம் ஸ்வேச்சயை வாஹம் ப்ரேக்ஷே கச்சித் கதாசந  ||
-- அஹிர்புத்ஹிந  ஸம்ஹிதை (பாஞ்சராத்ரா ஆகமம்)

வனத்திடரை 
ஏரியாம் வண்ணம் இயற்றும் இதுவல்லால் 
மாரியார் பெய்கிற்பார் மற்று?
-- இரண்டாம் திருவந்தாதி - பாசுரம் 16.

இத்யாதி இதுக்குப் பிரமாணம்.

--Compilation by Agaram Kidambi Srinivasa Rangan Srinivasa Dasan @ Dasarathy Dasan.